ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி குறித்து அக்க்ஷரா ஹாசன்

நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான அக்‌ஷரா ஹாசன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ‘ரஜினியுடன் கமல் கூட்டணி அமைத்தால் வரவேற்பீர்களா’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இருவரும் நெருங்கிய நண்பர்கள். தொடக்கம் முதலே சேர்ந்து பயணித்தவர்கள். எனவே ரஜினியுடன், கமல் அரசியலில் கூட்டணி அமைத்தால் மகிழ்ச்சி. ரஜினி சார் வந்தாலும் ஓ.கே., வராவிட்டாலும் ஓ.கே.தான். அவர்கள் இணைய வேண்டும் என்பதில் விருப்பம் உண்டு” என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவரிடம், கடந்த நவம்பர் மாதம் உங்கள் ஆபாச படம் பரவியதாக வதந்தி வந்தது குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், “அந்த சம்பவத்திற்கு பிறகுதான் எனக்கு பெரிய பக்குவம் வந்தது. பெண்களுக்கு எல்லா இடங்களிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த சூழலை பெண்கள் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும். உங்களை ஒருவர் தவறாக அழைத்தால் அவரிடம் முடியாது என்று தைரியமாக சொல்ல வேண்டும். எதிர்த்து நின்று போராட வேண்டும்” என்று கூறியுள்ளார்.