நடிகர் தனுஷுடன் பணியாற்றுவது குறித்து இயக்குனர் வெற்றிமாறன்.

சமீபத்தில் வந்த அசுரன் படம் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது, அப்படியிருக்க தொடர்ந்து தனுஷுடன் பணியாற்றுவது ஏன் என்று வெற்றிமாறனிடம் ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர். அதற்கு வெற்றிமாறன் “தனுஷை எனக்கு ‘அது ஒரு கனாக்காலம்’ முதல் தற்போது வரை 15 வருடம் தெரியும். அவரிடம் ஒரு போட்டி மனப்பான்மை இருக்கும்,அதாவது ஒரு கதாபாத்திரத்தை தன்னால் செய்ய முடியுமா என்று அவரே ஒரு சவாலாக எடுத்துக்கொள்வார். அப்படி அவர் சவாலாக எடுத்து செய்தது தான் அசுரனும்.அவருடன் பணியாற்றுவது எனக்கும் மிக எளிது” என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!