ரஜினிகாந்த் ஸ்டைலில் பால்காரனை பெருமைப்படுத்தும் ‘பெருநாளி’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குஷ்பூ, மனோரமா, ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1992ஆம் ஆண்டு ஜீன் 27ஆம் தேதி வெளியான படம் அண்ணாமலை.

இந்த படத்திலிருந்து தான் ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு போடப்பட்டது. பால்காரனின் (மாடுகள்) பெருமை மற்றும் நட்பின் வலிமை குறித்து பேசிய இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தற்போது அதுபோல் பால்காரனின் பெருமையை பேசும் ஒரு படம் தற்போது உருவாகியுள்ளது.

அந்த படத்தின் பெயர் பெருநாளி. பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த சிட்டிசன் மணி என்பவர் இயக்கியுள்ளார்.

ரோஷினி கிரியேஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மார்கிரேட் அந்தோணி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஹீரோவாக ஜெயம் என்ற புதுமுகம் நடிக்க, ஹீரோயினாக மதுனிக்கா நடிக்கிறார். ஹீரோவின் நண்பராக கிரேன் மனோகர் முக்கிய வேடத்தில் நடிக்க, இவர்களுடன் சிசர் மனோகர், கார்த்திக், ஆனந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

நாயகன் ஜெயம் படத்தில் பால்காரன் வேடத்தில் நடித்துள்ளார்.

தஷி இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பவர் சிவா நடனம் அமைக்க, தீப்பொறி நித்யா சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.

படத்தில் 6 பாடல்கள் உள்ளன. அதில் ஒன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றிய பாடலாகும்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிசர் மனோகர், கூல் சுரேஷ், இசையமைப்பாளர் தஷி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

error: Content is protected !!