Friday, August 14
Shadow

ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 50வது படத்தின் ஹீரோ ‘பிக் பாஸ்’ தர்ஷன்⁉*

பிக்பாஸ் இறுதிப் போட்டியில் ராஜ்கமல் சார்பாக தர்ஷன் ஹீரோவாக நடிக்க ஒரு திரைப்படத்தை தயாரிக்கவிருப்பதாக உலக நாயகன் கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று புதிய ராஜ்கமல் அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் பேசிய கமல், “ராஜ்கமலின் 50 வது படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளோம். அதில் நான் நடிக்கவேண்டும் என்பதில்லை. அந்த அளவிற்கு ராஜ்கமலை நீங்கள் வளர்த்திருக்கிறீர்கள் என்று பேசினார். ஏற்கனவே ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் நடிகர் தர்ஷன் நடிக்கும் படத்தை தயாரிக்கவுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்”. இந்நிலையில், ராஜ்கமலின் 50வது படம் குறித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.