கவலைக்கிடமான நிலையில் நடிகர் தென்னவன்*
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ‘என்னுயிர் தோழன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் தென்னவன். பின்னர் உலக நாயகன் கமல்ஹாசனின் ‘விருமாண்டி’ படத்தில் நடித்து பிரபலமானார். 52 வயதாகும் இவருக்கு திடீரென்று மூளையில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தென்னவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை கலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.











