வித்யாசமான கதாபாத்திரத்தில் இயக்குனர் நடிகர் சேரன் நடிக்கும் ‘ராஜாவுக்கு செக்’

இயக்குனர் நடிகர் சேரன், நடிகை சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் நடித்துள்ள படம் ‘ராஜாவுக்கு செக்’. இதனை சாய் ராஜ்குமார் இயக்கி உள்ளார்.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குனர் கூறுகையில், இயக்குனர் நடிகர் “சேரன் ‘க்ளைன் லிவின் சிண்ட்ரோ’ என்ற நோயால் பாதிக்கப்பட்டவர். எந்த நேரத்திலும் அவர் தீடீரென தூங்கிவிடுவார். இந்த குறைபாடுள்ள கதாபாத்திரம் உலகில் எந்த சினிமாவிலும் வந்ததில்லை. முதன் முதலாக தமிழ் திரைப்படத்தில் கொண்டு வந்திருக்கிறோம்” என்று கூறினார்.