வெளிநாட்டில் சிக்கித் தவித்த மருத்துவ கல்லூரி மாணவர்களை சென்னைக்கு வர உதவி செய்து அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்.

வெளிநாட்டில் சிக்கித் தவித்த தமிழகத்தை சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி மாணவர்களை தனி விமானம் மூலம் சென்னை திரும்ப நடிகர் சோனு சூட் உதவி செய்துள்ளார்.

தமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சோனு சூட். திரைப்படத்தில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் கதாநாயகன் என்று ஊரடங்கு நேரத்தில் நிரூபித்திருக்கிறார் நடிகர் சோனு சூட்.

இவர் முதலில் கொரோனா வைரஸ் நோய் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பையில் உள்ள தனது 6 மாடி நட்சத்திர ஓட்டலை வழங்கினார்.

பின்னர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல பஸ் வசதி செய்து கொடுத்து உதவினார்.

சமீபத்தில் குழந்தைகளின் படிப்புக்கு பசுமாட்டை விற்று செல்போன் வாங்கிய விவசாயிக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்தார்.

இந்நிலையில், வெளிநாட்டில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களை, தனி விமானம் மூலம் சென்னை திரும்ப உதவி செய்துள்ளார் நடிகர் சோனு சூட்

இதற்கு மாணவர்கள் அனைவரும் நடிகர் சோனு சூட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.