ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நாள் முதல் சத்தம் இல்லாமல் நிவாரணம் உதவி செய்து வருகிறார். நடிகர் ஸ்ரீமன்

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள இந்த நிலையில் திரைப்படத் தொழில் அனைத்து துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திரைப்பட துறையில் பணியாற்றி வருகிற தொழிலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்
தூய்மை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும்,
நடிகர் ஸ்ரீமன் சத்தம் இல்லாமல் உதவி செய்து வருகிறார்.

இந்த நிலையில் நண்பர் ஒருவர் நடிகர் ஸ்ரீமன் அவர்களிடம் இருந்து அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்கி வந்ததாக கூறினார்.

இந்த உதவியை நடிகர் ஸ்ரீமன் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்தே எந்தவிதமான பப்ளிசிட்டியும் இல்லாமல் செய்து வருவதாகச் சொன்னார்.

நண்பரிடம் பேசி முடித்ததும்
நடிகர் ஸ்ரீமன் அவர்களிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.

‘மாஸ்டர்’ திரைப்படத்துக்காக கொரோனாவுக்கு முன்பே டப்பிங் பேசி முடித்துவிட்டதாகவும் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் சொன்னவரிடம் ஊரடங்கு உத்தரவு காலத்தில் செய்த உதவி பற்றி கேட்டோம்.

‘‘கொரோனா ஊரடங்கு உத்தரவு சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று என்னுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்ததும் உடனடியாக என்னுடைய அப்பா, அம்மா, மனைவி ஆகியோர் தங்களிடம் இருந்த சேமிப்புப் பணத்தைக் கொடுத்தார்கள். அதுதவிர, என்னுடைய நண்பர்கள் சிலர் உதவி செய்தார்கள். மளிகைப் பொருட்களை லாப நோக்கமில்லாமல் ‘கிரேஸ் சூப்பர் மார்க்கெட்’ உரிமையாளர் ராஜ்குமார் சார் பர்சேஸிங் ரேட்டுக்கே கொடுத்தார். வி.பி.ஆர்.என்ற தொண்டு நிறுவனம் 140 நபர்களுக்கு 10 கிலோ அரிசி பை கொடுத்தார்கள்.

அந்த வகையில் இதுவரை குடும்பத்தினர் கொடுத்த ஆதரவால் உதவி செய்ய முடிந்தது. லாக்-டவுன் முடியும் தறுவாயில் உதவி கேட்டு நிறைய பேர் வருகிறார்கள்.

அதுதான் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. தொடர்ந்து உதவி செய்ய ஆண்டவன் அருள்புரிவான் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்றார் நடிகர் ஸ்ரீமன்.

நீங்கள் வணங்கும் அண்ணாமலையார் உங்களுக்கு அருள்புரிவான்.

CLOSE
CLOSE
error: Content is protected !!