ஹிர்த்திக் ரோஷன் படப்பிடிப்புக்காக தீவிரவாதிகள் போல் வேடமிட்டிருந்த துணை நடிகர்கள் இருவர் கைது.
மும்பையில் படப்பிடிப்புக்காக தீவிரவாதிகள் போல் வேடமிட்டிருந்த துணை நடிகர்கள் இருவரை நிஜ தீவிரவாதிகள் என எண்ணி போலீசார் கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மும்பை நகரின் வசாய் பகுதியில் சிகரெட் வாங்குவதற்காக சுற்றி திரிந்த இருவரை தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மும்பை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் நடைபெற்ற விசாரணையில், வசாய் பகுதியின் அருகே பாலிவுட் நடிகர்கள் ஹிர்த்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ரோப் ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததும், கைது செய்யப்பட்டவர்கள் அந்த திரைப்படத்தில் வரும் காட்சிக்காக தீவிரவாதிகள் போல் வேடமிட்டிருந்த துணை நடிகர்கள் என்பதும் தெரிய வந்தது.
ஆனாலும் பொதுவெளியில் மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் சுற்றித்திரிந்ததாக துணைநடிகர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.