அஜித்குமார் நடிக்கும் வலிமை திரைப்படத்தில் பல சீனியர் நடிகர்கள் விலகினார்க்ள்.

சென்னை 13 ஜூன் 2021

அஜித்குமார் நடிக்கும் வலிமை திரைப்படத்தில் பல சீனியர் நடிகர்கள் விலகினார்க்ள்.

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் அஜித்குமார் நடித்து வரும் வலிமை திரைப்படத்தில் இருந்து சீனியர் நடிகர்கள் வெளியேறிவிட்டதாக இயக்குனர் எச்.வினோத் கூறியிருக்கிறார்.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்ராவால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.

இதுவரை ’வலிமை’ திரைப்படத்தின் எந்த அப்டேட்டும் படக்குழுவினர் வெளியிடவில்லை.

ஆனால், இந்த திரைப்படத்தை குறித்து ஏதாவது செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில் இயக்குனர் எச்.வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த ஆண்டு ’வலிமை’ திரைப்படத்திற்காக ஒரு சில காட்சிகளை சீனியர் நடிகர்களை வைத்து படமாக்கினோம்.

அதன் தொடர்ச்சியாக அந்த நடிகர்களை படப்பிடிப்பிற்கு அழைத்த போது அவர்கள் கொரோனா தொற்று பயம் காரணமாக படப்பிடிப்பிற்கு வர முடியாது என்று கூறிவிட்டனர்.

அவர்களுக்கு பதிலாக புதிய நடிகர்களை வைத்து தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாக இயக்குனர் எச் வினோத் தெரிவித்துள்ளார் .

error: Content is protected !!