சூப்பர் ஸ்டாரின் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் படக்குழுவினர் அறிவித்தனர் !
சென்னை 24 ஆகஸ்ட் 2022 சூப்பர் ஸ்டாரின் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் படக்குழுவினர் அறிவித்தனர் !
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 22ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ ’ திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் யார் என்று படக்குழுவினர் அறிவித்தனர்.
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கின்றார்.
இசையமைப்பாளர் அனிருத்தின் அற்புதமான தீம் மியூசிக்கில் திரைப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’’ திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
முன்னணி நட்சத்திரங்களுடன் இன்னும் சில ஆச்சரியங்கள் உள்ளது.
அவை படப்பிடிப்பு முன்னேறும்போது தெரியவரும் என்று கூறப்படுகிறது.
ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிக்கும் முக்கியமான பெரிய நட்சத்திரங்களில் தமன்னா மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் உள்ளனர் என்பது இதுவரை நாம் அறிந்த விஷயம். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்டன் சிவா சண்டைக்காட்சிகளை உருவாக்க உள்ளார்.
https://twitter.com/sunpictures/status/1562386739825876992?t=ismvxZaS5rWV2zCbvE15dw&s=19
https://twitter.com/moviewingz/status/1562390652129751040?t=mUC7Y5lM90oQlZMqYX8QNA&s=19










