அசுரன்’ படக்குழுவினருக்கு உலகநாயகன் கமல்ஹாசன் வாழ்த்து

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகிய ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நேற்று இரவு உலக நாயகன் கமலஹாசன் ’அசுரன்’ திரைப்படத்தை பார்த்தார். அவருடன் அவருடைய மகள் நடிகை சுருதிஹாசன் மற்றும் அசுரன் பட கதாநாயகி மஞ்சுவாரியர் இந்த படத்தை பார்த்தனர். இதனை தொடர்ந்து, மஞ்சு வாரியரை நேரில் பாராட்டிய கமல்ஹாசன், அதன்பின் தனுஷ் லண்டனில் இருக்கும் தனுஷூக்கு போன் செய்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் இயக்குனர் வெற்றிமாறனுக்கும் தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

error: Content is protected !!