யு-டியுபில் முன்று கோடி பார்வைகளைக் கடந்த ஹிந்தி ‘அசுரன்’ திரைப்படம்.

சென்னை 16 மே 2021

யு-டியுபில் முன்று கோடி பார்வைகளைக் கடந்த ஹிந்தி ‘அசுரன்’ திரைப்படம்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மஞ்சுவாரியர் மற்றும் பலர் நடித்து 2019 ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘அசுரன்’.

இந்த திரைப்படத்தை அதே பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்து யு-டியுபில் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி வெளியிட்டனர்.

இரண்டு மாதங்களுக்கு குள்ளாகவே யு-டியுபில் இந்த திரைப்படம் முன்று கோடி பார்வையாளர்களை
கடந்துள்ளது.

நம்ம ஊர் கதைக்களத்துடன், நமது கிராமத்துக் கதாபாத்திரங்களுடன் உருவாக்கப்பட்ட திரைப்படத்திற்கு ஹிந்தியில் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது.

திரைப்படத்தைப் பார்த்துள்ள பல வட இந்திய ரசிகர்களும் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தையும் வெகுவாகப்ப பாராட்டியுள்ளனர்.

‘அசுரன்’ திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது நடிகர் தனுஷ் நடித்து கடந்த மாதம் வெளிவந்த ‘கர்ணன்’ படத்தையும் ஹிந்தியில் டப்பிங் செய்யும் வேலைகளை ஆரம்பித்துள்ளார்களாம்.

விரைவில் ‘கர்ணன்’ திரைப்படமும் ஹிந்தியில் வெளியாக உள்ளது.

error: Content is protected !!