அண்ணே வெயிட்டு வெயிட்டு.. மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு ஆல்பம் சமர்ப்பணம் செய்யும் நடன இயக்குநர் ஸ்ரீதர்.
தமிழ் திரைப்பட உலகில் நடன இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் நடன இயக்குநர் ஸ்ரீதர்.
தனித்துவம் கொண்ட அவரது நடன அசைவுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜய்க்கு “ரசிகனின் ரசிகன்” என்ற ஆல்பம் ஒன்றை சமர்ப்பணம் செய்திருந்தார்.
அந்த ஆல்பம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து தற்போது மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதிக்கு “அண்ணே வெயிட்டு வெயிட்டு” என்ற ஆல்பம் பாடலைச் சமர்ப்பணம் செய்யத் திட்டமிட்டுள்ளார் நடன இயக்குநர் ஸ்ரீதர்.
ஆரம்பகட்ட பணிகளில் இருக்கும் இந்தப் பாடல் விரைவில் அவரின் ஆத்மார்த்தமான சமர்ப்பணமாக வெளியாக உள்ளது.











