சினிமா பத்திரிகையாளர்களுக்கு கபசுர குடிநீர் & ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 மருந்துகளை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் வழங்கினார் !
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் அந்த சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு அனைவருக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சித்தா மருந்தான ‘கபசுர குடிநீர்’ பொடியும் ஹோமியோபதி மருந்தான ‘ஆர்கானிக்கம் ஆல்பம் – 30’ யும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி
தமிழ் நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.வி.உதயகுமார் மற்றும் தமிழ் நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் பொருளாளர் பேரரசு ஆகியோரால் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சினிமா பத்திரிகையாளர்களுக்கும் மேற்படி கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சித்தா மருந்தான கபசுர குடிநீர் பொடியும், ஹோமியோபதி மருந்தான ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 யும் வழங்க முன் வந்தனர்.
உடனடியாக நமது 65 ஆண்டு பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் D.R.பாலேஷ்வர் அவர்களை தொடர்பு கொண்டு 200 கபசுர குடிநீர் பாக்கெட்டுகளையும் 500 ஆர்கானிக்கம் ஆல்பம் – 30 ஹோமியோபதி மருந்து புட்டிகளையும் வழங்கி அவற்றை உட்கொள்ளும் முறையையும் விலக்கி ஒரு ஆடியோ பதிவையும் கொடுத்துள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்படாமல் மனித உயிர் காக்கும் மருந்துகள் என்பதால் சினிமா பத்திரிகையாளர் சங்கம் அனைத்து சினிமா பத்திரிகையாளர்களுக்கும் இம்மருந்துகளை வழங்க முயற்சித்து வருகிறது.











