அரசியலில் நுழையாமல் மக்களுக்கு தேவையான சேவைகளை செய்ய முடியும் என்று நம்புகிறேன் நடன இயக்குனர் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் ராகவா லாரன்ஸ்.
நடன இயக்குனர் நடிகர் இயக்குனர், தயாரிப்பாளர் ராகவா லாரன்ஸ் அவர்கள் என பன்முகம் கொண்டவர்.
இவர் தனது அம்மாவுக்காக கோயிலும் கட்டியிருக்கிறார். மேலும் சமூக பணிகளுக்காக அறக்கட்டளை நிறுவி நடத்தி வருகிறார்.
இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் தத்தெடுத்து அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய டுவிட்டர் பதிவில்…
“அரசியலுக்கு வந்து ஒரு பதவி பெற்று அதன் பிறகு ஏழைகளுக்கு நான் தொண்டு செய்வேன் என்று கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனக்கு அதில் உடன்பாடில்லை.
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாக சமூகத்திற்கு சேவை செய்வேன்.
அரசியலில் நுழையாமல் மக்களுக்கு தேவையான சேவைகளை செய்ய முடியும் என்று நம்புகிறேன். இதற்கு முன்பு நான் வெளியிட்ட வீடியோ எனது 12 வருட முயற்சி மற்றும் நம்பிக்கையின் சான்று. அந்த வீடியோவில் பல குழந்தைகளின் கனவு நனவாகியிருப்பதை நீங்கள் பார்க்கலாம்” என பதிவிட்டுள்ளார்.
Politics pic.twitter.com/xPfoi0QclC
— Raghava Lawrence (@offl_Lawrence) August 9, 2020











