மக்களுக்கு பாடியது போதும் இனி என்னிடம் பாட வா என்று இறைவன் அழைத்துக் கொண்டான்! போய் வா தம்பி நடிகர் சிவகுமார்.

சென்னை : 25 செப்டம்பர் 2020

அரை நூற்றாண்டுக்கும் மேலாக
எத்தனை ஆயிரம் பாடல்களை
எத்தனை மொழிகளில் பாடிய
உன்னதக்கலைஞன் !

மூச்சுக்காற்று முழுவதையும்
பாடல் ஓசையாக மாற்றியவன் !

இமயத்தின் உச்சம் தொட்டும்
பணிவின் வடிவமாக
பண்பின் சிகரமாக
இறுதி உரையிலும்
வெளிப்படுத்தியவன்…

இதுவரை மக்களுக்கு
பாடியது போதும்
இனி என்னிடம் பாட வா
என்று இறைவன்
அழைத்துக் கொண்டான்!
போய் வா தம்பி – மார்க்கண்டேயன் நடிகர்
சிவகுமார்

error: Content is protected !!