இந்தியாவின் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாருடன் ஒர்க் செய்வது போன்ற ஒரு பீல் வரவில்லை. – நடிகை மாளவிகா மோகனன்,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அருஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் இருந்து இதுவரை முன்று பாடல்கள் வெளியாகியுள்ளது.

மற்ற பாடல்கள் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

நாயகி மாளவிகா மோகனன் பேசியதாவது…

இந்தியாவின் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாருடன் ஒர்க் செய்வது போன்ற ஒரு பீல் வரவில்லை. ஏனென்றால் அவ்வளவு எளிமையான மனிதராக தளபதி விஜய் சார் இருந்தார்.

இதுவரை நான் பணிபுரிந்த நடிகர்களில் தளபதி விஜய் சார் ஒரு எளிமையான மனிதர். அதுபோல் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் ஒரு கூலான ஆள். என்று பேசினார் மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்.

நடன இயக்குனர் சதீஷ் பேசியதாவது…

விக்னேஷ் சிவன் எழுதிய ஒரு பாடலுக்கு நான் நடனம் அமைத்துள்ளேன்.

தளபதி விஜய் சாருக்கு நடனம் அமைக்கனும் ஒரு வெறி இருந்துச்சி. இப்போ அது நிறைவேறிச்சிடுச்சி” என பேசினார் சதீஷ்.

நடிகர் அர்ஜீன் தாஸ் பேசியதாவது…

எனக்கு இதுநாள் வரை என் பெற்றோர்கள் தான் பண உதவி செய்து வந்தனர். இந்த படம் ஒப்புக் கொண்ட பிறகுதான் நான் அவர்களுக்கு ஒரு கிப்ட் வாங்கி கொடுத்தேன்.

இந்த பட சூட்டிங்குக்கு போனதே என் கனவு நனவாகியதாக கருதுகிறேன்.

தளபதி விஜய் சாரை நேரில் சந்தித்து வணக்கம் சொல்வது… மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடம் முத்தம் வாங்கியது… லோகேஷ் சாரிடம் பேசியது… இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்” என பேசினார் அர்ஜீன் தாஸ்.

error: Content is protected !!