இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா.
புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் மறு உருவாக்கத்தின் உரிமையை ‘உயிர்’, ‘மிருகம்’ மற்றும் ‘சிந்து சமவெளி’ படத்தின் இயக்குனர் சாமி வாங்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-இப்படம் 80 களில் நடக்கும் கதை என்பதால் அதன் அடிப்படை உணர்வுகளை சிதைக்காமல் கொடுக்க முடிவு செய்தேன். அதற்காக பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று பல இடங்களில் தேடி இறுதியாக, கொடைக்கானலுக்கு அருகிலுள்ள பூம்பாறை என்று உரை தேர்ந்தெடுத்தேன். இவ்வூரில் உள்ள வீடுகள் 500 வருடங்கள் பழமையானவை. ஆகையால், நான் நினைத்தது போல் படத்தின் உணர்வை சிதையாமல் கொடுக்க இந்த இடம் தான் சரியானது என்று படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம்.
இப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அணுகினேன். அவர் படத்தை எடுத்துட்டு வாருங்கள் என்று கூறிவிட்டார். படம் முடிந்ததும் அவரிடம் போட்டுக் காண்பித்தேன். உடனே இசையமைக்க ஒப்புக் கொண்டார். தற்போது, பின்னணி இசையமைக்கும் பணியைத் தொடங்கி விட்டார்.
இப்படத்திற்கு ‘அக்கா குருவி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு சிறப்பு விருந்தினராக ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தை இயக்கிய இயக்குனர் மஜீத் மஜிதியை அழைக்கவிருக்கிறேன்.
இப்படத்தை என் நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளேன்.
இவ்வாறு இயக்குனர் சாமி கூறினார்.
இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7வயது தங்கை கதாபாத்திரங்களுக்கான 200க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் தேர்வானார்கள். மற்றும் பிரதான கதாபாத்திரமாக ஜோடி ‘ஷூ’ ஒன்று இடம்பெறுகிறது.
மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ‘அக்கா குருவி’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.
Related posts:
அக்கா குருவி திரைப்படத்தை பாராட்டிய உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி!!!
“அக்கா குருவி’ படம் மாதிரி படங்கள் வரவேண்டும்..” இளையராஜா.!
இசைஞானி இளையராஜா பாட்டு எழுதி இசையமைத்த ‘அக்கா குருவி‘ சாமி இயக்கத்தில் உலகத்தரப்படம்
அக்கா குருவி போன்று நல்ல படங்கள் இயக்குவதற்கு இங்கு நிறைய சிக்கல்கள் உள்ளது – இயக்குனர் அமீர்!
லோகேஷ் கனகராஜ். இயக்கத்தில் ‘தளபதி 64’ படத்தில் இணைந்த இயக்குனர்
நடிகர் மோகன் பாபுவின் ‘சன் ஆஃப் இந்தியா’ படம் வெற்றி பெற இசைஞானி இளையராஜா வாழ்த்து.
இளையராஜா இசையில் ”முன்பதிவு” புதுமுக இயக்குநருக்கு இளையராஜா அறிவுரை!
இளையராஜா இசையில் விஜய் சேதுபதி சூரி நடிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை !!
நட்டியுடன் ‘சாயம்’ இயக்குநர் இணையும் பரபரப்பான கிரைம் திரில்லர் ‘கூராய்வு’!
ஆடுகளம் கிஷோர் கதையின் நாயகனாக நடிக்கும் “மஞ்ச குருவி”!

