இசைஞானி இளையராஜா பாட்டு எழுதி இசையமைத்த ‘அக்கா குருவி‘ சாமி இயக்கத்தில் உலகத்தரப்படம்
முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்துவரும் படம் ‘அக்காகுருவி’. சாமி டைரக்ட் செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரீ-ரெகார்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. உலகத்தரவரிசையில் இப்படத்துக்கு ரீ-ரெகார்டிங் செய்து வருகிறார் இளையராஜா. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பான அக்கா குருவியை அதன் ஒரிஜினல் கெடாமல் படமாக்கியுள்ளார். படத்தை பார்த்த பின் தான் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார் இளையராஜா.
இரண்டு குழந்தைகள், அப்பா அம்மா இவர்களுடைய உணர்ச்சிகளின் தாக்கம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். இந்த காட்சிகளுக்கு பின்னணி இசையில் பல உணர்ச்சிகரமான இடங்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அது அமையும். மொத்தம் 11 பாடல்கள் உபயோகப்படுத்தியுள்ளனர்.
குழந்தைகளின் கோடை கொண்டாட்டமாக மே மாதம் இப்படத்தை திரைக்குகொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.
கதை:- மஜித் மஜிதி
பாடல்கள் & இசை :- இளையராஜா
இயக்கம்:- சாமி
Related posts:
“அக்கா குருவி’ படம் மாதிரி படங்கள் வரவேண்டும்..” இளையராஜா.!
இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா.
இசைஞானி இளையராஜா இசையமைத்த “மதுரை மணிக்குறவன்” படத்தின் பாடல்களை அவரது “இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் வெளியிட்டார்.
அக்கா குருவி திரைப்படத்தை பாராட்டிய உலகப்புகழ் பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி!!!
தமிழரசன் ” படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி, கே.ஜே.யேசுதாஸ் பாடல்!
இசைஞானி இளையராஜா ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார்.!
தமிழரசன் ” படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு.
இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் மரணம் பாடல்கள் பாடி நண்பர்கள் இறுதி அஞ்சலி நெகிழ வைக்கும் காணொளி வைரலாகி வருகிறது.
இசைஞானி இளையராஜா இசையில் விஜய் பிரகாஷ் இயக்கத்தில் ’96’ பட புகழ் கௌரி நடிக்கும் “உலகம்மை”.
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தின் நிபந்தனைகளை ஒப்புக் கொண்டார் இசைஞானி இளையராஜா காவல்துறை பாதுகாப்புடன் தியானம் செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

