இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களுக்கு ரசிகர் மன்றம் உருவானது.*!

இந்திய திரைப்பட உலகில் உச்சத்தை தொட்டு இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர்
கே. பாலசந்தர் என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அவர்தான் சிவாஜிராவ்க்கு ரஜினிகாந்த் என்ற பெயரை வைத்தார் என்பதும் பலருக்கும் நினைவிருக்கும்.

ரஜினிகாந்த் இல்லாமல் பலரின் சினிமா வாழ்க்கைக்கு விதை போட்டவரே இவர்தான். கமல்ஹாசனின் சினிமா வாழ்விலும் கே. பாலசந்தரின் பங்கு மிகப்பெரியது.

பிரகாஷ்ராஜ், விவேக் உள்ளிட்ட பலரையும் இவர்தான் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத பல தரமான படங்களை கொடுத்துள்ளார் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர்

இவர் மறைந்து கிட்டதட்ட 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இவரால் கவரப்பட்ட ரசிகர்கள் இவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளனர்.

வருகிற டிசம்பர் 23ஆம் தேதி கே. பாலசந்தரின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை குமாரராஜா முத்தையா ஹாலில் ரசிகர் மன்றத்தை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!