உங்கள் குழந்தைகள் கல்விக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு ராகவா லாரன்ஸ் ஆறுதல் கூறினார்
ரேனிகுண்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் தீப்பெட்டி கணேசன்.
இவர் சமீபத்தில் மிகவும் வறுமையில் உள்ளதாகவும் நடிகர் அஜித்குமார் தனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கண்ணீருடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் என்னுடைய உன்மையான எனது பெயரான கார்த்திக் என்ற பெயரை இதுவரை யாரும் கூறியதில்லை.
ஆனால் அஜித்குமார் அவர்கள் மட்டுமே என்னை கார்த்தி என்று கூப்பிட்ட கடவுள்.
அஜித்குமார் அவர்களிடம் உதவி கேட்க முயற்சி செய்தேன். ஆனால் என்னால் முடியவில்லை. எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை.
ஆனால் எனது குழந்தைகளுக்கு ஏதாவது உதவி கிடைக்க வேண்டும்.
அஜித்குமாரிடம் இந்த வீடியோ செய்தியை தெரிவித்தால் உடனே அவர் என்னை அழைத்து உதவி செய்வார். என கண்ணீருடன் கூறியிருந்தார் தீப்பெட்டி கணேசன்.
இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில்…
‘நண்பா இந்த வீடியோவை அஜித்குமாரின் மேனேஜரிடம் சேர்த்துவிட்டேன்.
அது அஜித்குமார் கிடைத்தால் அவர் நிச்சயம் உதவி செய்வார்.
உங்கள் குழந்தைகள் கல்விக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். உங்கள் விபரங்களை உடனடியாக அனுப்பவும் என்று தெரிவித்துள்ளார்.











