காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் நேற்றிரவு காலமானார் இயக்குநர் சீனுராமசாமி இரங்கல

சென்னை 22 மார்ச் 2021

ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தீப்பெட்டி கணேசன்.

இதன் பின்னர் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

திரைப்பட துறையில் நடிக்க வாய்ப்பு இல்லாத காரணத்தால் தீப்பெட்டி கணேசன் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

எனவே பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானமின்றி தவித்து வந்தார்.

அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

பல திரைப்பிரபலங்கள் உதவினர்.

இந்த நிலையில், உடல்நலக்குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார்.

அவரது மறைவுக்கு இயக்குநர் சீனுராமசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில்…

“எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.அன்புநிறை இதய அஞ்சலி கணேசா..” எனப் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!