உலகநாயகன், தளபதி, தல, கார்த்திக், சிம்பு, ஜெயம் ரவி, சூர்யா, திரைப்படத்தின் பிரபல தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் காலமானார்.
இந்தியா மற்றும் இல்லாமல் உலக முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் தொடர்ந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
அதே சமயம் அமைச்சர்கள் மாநில முதல்வர்கள் கவர்னர்கள் திரைப்பட உலகில் உள்ள நடிகர் நடிகைகள் என பலர் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழ் திரைப்பட உலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.
மேலும் பாலிவுட் பிரபலங்கள் நடிகர் அமிதாப் பச்சன் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் திரைப்பட உலகில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ் திரைப்பட உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு திடீரென்று உடல் நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தயாரிப்பாளர் வி.சுவாமிநாதனுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.
இந்த லட்சுமி மூவி மேக்கர்ஸ்
நிறுவனத்தை 3 பேர் சேர்ந்து நிர்வகித்து வந்தனர்
லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் கே.முரளிதரன் ஜி.வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து சரத்குமார் நடித்த ’அரண்மனை காவலன்’ இளைய திலகம் பிரபு நடித்த ‘மிஸ்டர் மெட்ராஸ் நவரச நாயகன் கார்த்திக் நடித்த ‘கோகுலத்தில் சீதை’ பார்த்திபன் நடித்த உன்னருகே நானிருந்தால்
நவரச நாயகன் கார்த்திக் அஜித் குமார் இணைந்து நடித்த ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ தளபதி விஜய் நடித்த
‘பகவதி’ உலகநாயகன் கமலஹாசன் மாதவன் இணைந்து நடித்த ‘அன்பே சிவம்’ சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ சூர்யா நடித்த ‘உன்னை நினைத்து’ தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ ஜெயம் ரவி நடித்த ‘தாஸ்’ மற்றும் ‘சகலகலா வல்லவன்’ உள்ளிட்ட பல வெற்றிப் திரைப்படங்களை இந்த நிறுவனம் வி சுவாமிநாதன் தயாரித்திருக்கிறார்.
இந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநான் திரைப்படங்களில் நடித்துள்ளார்
சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் வி சுவாமிநாதன், நடிகர் நவரச நாயகன் கார்த்திக் கதாநாயகனாக நடித்த ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்து “எத்தன வருஷமா கூவு ஊத்துர” என்ற வசனம் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.
வடிவேலுடன் இவர் நடித்த இது உங்கள் சொத்து என்ற பஸ் காமெடி பிரபலம். இது பலருக்கு நினைவிருக்கலாம்.
இவருடைய மகன் நடிகர் அஸ்வின் ராஜா என்பவர் ‘கும்கி’ மற்றும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் அஸ்வினு ராஜாவுக்கு 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.











