புதுமை தோற்றத்தில் அஜித்குமார் – ‘வலிமை’ திரைப்படத்திற்கு தயாராகுகிறாரா ⁉*
அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் அதேக் கூட்டணியில் ’வலிமை’ என்ற தலைப்பில் படம் ஒன்று உருவாகவுள்ளது. யுவன் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ‘வலிமை’ படத்தின் கேட் அப் ஆகா இருக்கலாம் என கூறப்படுகிறது.











