17 வருடங்களுக்கு பிறகு தளபதியுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் உதயாராஜ்

நடிகர் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய்பேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

ஏற்கெனவே நட்சத்திர பட்டாளமே நடித்தள்ள நிலையில் நடிகர் உதய்ராஜ் என்பவரும் இதில் நடித்துள்ளார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது தளபதி விஜய்யுடன் ‘திருமலை’ படத்தில் மெக்கானிக்காக நடித்துள்ளார்.

மாஸ்டராக தன் சினிமா கேரியரை தொடங்கிய இவர் தற்போது மாஸ்டர் விஜய்யுடன் நடித்துள்ளதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், ”தளபதி விஜய் அண்ணாவுடன் இணைந்து 17 வருடங்களுக்கு பிறகு மாஸ்டர் படத்தில் நடித்துள்ளேன்.

அப்போ திருமலை, இப்போ மாஸ்டர். லோகேஷ் கனகராஜிற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

 

error: Content is protected !!