கொரோனாவை கொன்று , விரட்டுவோம் சுகாதாரம் ஒன்றே! தற்போதைய , மருந்து! இயக்குனர் பாரதிராஜா

என் இனிய தமிழ் மக்களே

இயற்கைக்கும், விஞ்ஞானத்திற்கும் நடக்கும் ,போராட்ட யுத்தத்தில், பல சூழ்நிலை காலக்கட்டங்களில் மிகக் கொடிய அபாய தொற்று நோய்களை கண்டது ,நம் பாரத பூமி.
நிபா வைரஸ், சிக்கன்குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், ப்ளேக்நோய், ஆந்த்ராக்ஸ், HIV, என பல ஒட்டுண்ணிகள்
நம் தேசத்தை அச்சுறுத்தியை நாம் அறிந்தோம் , கடந்து வந்தோம்

அதுபோலவே!
வளரும், விஞ்ஞானத்தில் கொரோனா போன்ற வைரஸ்கள் ஆச்சிரியமானவை
தனிமனித ,சுகாதாரமே, தேச நலன் என
நம் பாரதபிரதமர் மோடி அவர்களின் ஊரடங்கு உத்தரவிற்கும், விழிப்புணர்வு ஏற்பாட்டிற்கும், கைகொடுப்போம்.

நம்தமிழக அரசின் முயற்சியின் ,வேகங்களும், பாரட்டுக்குறியவை.
இன்று ஓர் நாள் சூரிய ஒளி படாமல் தங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.

எதிர்ப்பு சக்தியால், பலபோராட்டங்களை
வென்றவர்கள் நாம்.
உடல் எதிர்ப்பு சக்தியால் கொரோனாவை
கொன்று , விரட்டுவோம்
சுகாதாரம் ஒன்றே!
தற்போதைய , மருந்து!

அன்புடன்
பாரதிராஜா

error: Content is protected !!