கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள காரணமாக அனுமதி கிடைத்தும் படப்பிடிப்புக்கு வர மறுக்கும் தெலுங்கு கதாநாயகர்கள்.

ஆந்திரா, தெலுங்கானாவில் அந்த அரசு அறிவித்துள்ள நிலையில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கினாலும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு அதிகமாகும் என்ற பயத்தால் தெலுங்கு நடிகர்கள் நடிகைகள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுக்கிறார்களாம்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் பீதி நிலவுகிறது.

ஒரு சில மாநில அரசுகள் ஊரடங்கை தளர்த்தி உள்ள நிலையில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் திரைப்பட படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அனுமதி கிடைத்து இரண்டு வாரங்கள் ஆகியும் இரு மாநிலங்களிலும் தெலுங்கு படப்பிடிப்புகளை இன்னும் தொடங்கப்படவில்லை.

நடிகர்கள் பிரபாஸ் மகேஷ்பாபு ஜூனியர் என்.டி.ஆர் ராம்சரண் அல்லு அர்ஜூன் மற்றும் அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகள் கொரோனா அச்சுறுத்தல் அதிகமுள்ள நிலையில் படப்பிடிப்புக்கு ஆகஸ்டு மாதம் வரை வர மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இதனால் தெலுங்கு திரைப்பட படப்பிடிப்பை தொடங்க இயலாத நிலைமை உள்ளார்கள்.

நடிகர் ராணாவின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு கூறும்போது, “கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள் மற்ற நடிகர் நடிகைகள் எல்லோரும் ஆகஸ்டு மாதம்வரை படப்பிடிப்புக்கு வரமாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இதனால் தெலுங்கு
திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இயலாத நிலைமை உருவாகி உள்ளது.

குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் வைத்து பெரிய படப்பிடிப்புகளை நடத்துவதும் இயலாத காரியம். பல தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னையில் இருக்கின்றனர்.

அவர்கள் அனைவரையும் அழைத்து வருவதிலும் மிகவும் சிக்கல் உள்ளது.

எனவே ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம்தான் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க முடியும்“ என்கின்றனர். தெலுங்கு திரைப்பட உலகினர்.

error: Content is protected !!