கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை சேர்த்து வாங்கி விடுவார்கள் போலிருக்கிறதே இயக்குனர் வெங்கட் பிரபு அட்வைஸ்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் மே மாதம் 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் எனது பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
பால், மளிகை, காய்கறிகள் வாங்க உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் வரலாம் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29 வரை கடுமையான ஊரடங்கு உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமல்படுத்தி உள்ளார்.
சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் இந்த கடுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
எனவே மக்கள் நேற்று ஏப்ரல் 25ம் தேதி அதிகளவில் வெளியே வந்தனர்.
தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி குவிக்க அனைவரும் வெளியே வந்துவிட்டதால் திருவிழா போல கூட்டம் காணப்பட்டது.
இந்த திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
சமூக விலகலை கடைப்பிடிக்காமல் மக்கள் இப்படி சுற்றி திரிந்தால் கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு அதிகளவில் இருக்கும். நாட்டில் நிலைமை என்னவாகும்? என பலரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது…
’எதற்காக சென்னை மக்கள் இவ்வாறு பயந்துகொண்டு பொருட்களையெல்லாம் வாங்கிக் குவிக்கின்றார்கள்?
இந்த நான்கு நாள் ஊரடங்கு உத்தரவில் பொருட்களை வாங்கிக் கொள்வததோடு இவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை சேர்த்து வாங்கி விடுவார்கள் போலிருக்கிறதே.
நான்கு நாட்களும் வீட்டில் பிரியாணியா சமைக்கப் போகிறார்களா? தயவுசெய்து அமைதியாக வீட்டில் இருங்கள். இதுவும் கடந்து போகும் என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் கொரோனா குறித்த அச்சம் வேண்டாம். வீட்டில் இருங்கள். இதுவும் கடந்து போகும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கூறியிருந்தார்.
தற்போது இயக்குனர் வெங்கட்பிரபுவும் இதுவும் கடந்து போகும் என்ற வார்த்தை கூறியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.
https://twitter.com/vp_offl/status/1253957052612833280?s=19











