பிழை’ திரைப்படத்தின் திரையிடும் தேதி குறித்த தகவல்

‘இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் சின்ன காக்கா முட்டையாக நடித்து ரசிகர்களை ஈர்த்த ரமேஷ், ‘அப்பா’ படத்தில் நடித்த நசத், கோகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பிழை’. மேலும் சிறுவர்களின் அப்பாவாக சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் நடிக்கின்றனர். தர்ஷினி, கல்லூரி வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 14ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

error: Content is protected !!