“டிஎன்ஏ” திரைப்படக் குழுவினருக்கு இயக்குனர் சுதா கொங்கரா பாராட்டுகளை தெரிவித்துள்ளார் !
“டிஎன்ஏ” திரைப்படக் குழுவினருக்கு இயக்குனர் சுதா கொங்கரா பாராட்டுகளை தெரிவித்துள்ளார் !
சென்னை 23 ஜூன் 2025 நடிகர் அதர்வா நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் 20ஆம் அன்று வெளியான திரைப்படம் டிஎன்ஏ ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த டிஎன்ஏ திரைப்படத்தில் நடிகை நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
டிஎன்ஏ திரைப்படம் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திரைப்படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது திரைப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
நடிகர் அதர்வா கடைசியாக நடித்து வெளியான நிறங்கள் மூன்று திரைப்படம் மக்களிடம் எதிர் பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் டிஎன்ஏ திரைப்படத்தின் மூலம் நடிகர் அதர்வா கம்பேக் கொடுத்துள்ளார்.
மேலும், டிஎன்ஏ திரைப்படத்தின் முன்பதிவுகள் மற்றும் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், டிஎன்ஏ திரைப்படத்தை பார்த்த இயக்குனர் சுதா கொங்கரா தனது பாராட்டுகளை எக்ஸ் தளத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்,” DNA கதையை நெல்சன் வெங்கடேசன் எப்போதும் போல அழகாக இயக்கியுள்ளார்.
அதர்வா, நிமிஷா, சேட்டன பாலாஜி சக்திவேல் ஆகியோரின் நடிப்பு அருமையாக இருந்தது.
DNA ஒரு அழகான படம்” என பதிவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
https://x.com/Sudha_Kongara/status/1937115307417690307?t=7qktp4cb13hSeqHBR-mAHw&s=19











