திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர், ‘தாராள பிரபு’ திரைப்படத்தை மீண்டும் திரையிடப்படும்.

ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டைன்மென்ட் பி லிட் சார்பாக பல வெற்றிப் படங்களை விநியோகித்த எங்களுக்கு, நீங்கள் ஆரம்பம் முதலே அளித்து வருகின்ற அன்புக்கும் பேராதரவுக்கும் நன்றி. இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில், ஹரிஷ் கல்யான், விவேக், தான்யா ஹோப் நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற எங்களது முதல் தயாரிப்பான ‘தாராள பிரபு’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

உலகே ஸ்தம்பித்து போயிருக்கின்ற இந்த சோதனையான நேரத்தில், நாம் அனைவருமே பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதிவேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் CoVid-19 பாதிப்பால், நாம் அனைவருமே உரிய பாதுகாப்புடன் வீட்டிலேயே இருப்பதோடு மட்டுமின்றி, தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதையும் தவிர்க்குமாறு இந்த தருணத்தில் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

கடின உழைப்பும் தீவிர காதலும் கொண்டு படைக்கப்பட்ட ‘தாராள பிரபு’ திரைப்படம், ஒரு ஆகச்சிறந்த கருத்தை பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அதற்கு கிடைத்த உங்கள் அன்பும் ஆதரவும் ஈடு இணையற்றது.

இத்தகைய ஒரு நிலையில், படம் வெளியான மூன்றே நாட்களில் அதனை காட்சிப்படுத்த முடியாத சூழல் உருவானது மிகவும் துரதிஷ்டவசமானது.

ஆகையால், ரசிக பெருமக்களை மீண்டும் திரையிடும் நேரத்தில் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு அளிக்க வேண்டும் என கோரும் அதே நேரத்தில், சட்டத்திற்கு புறம்பான வேறெந்த வழிகளிலும் இப்படத்தை பார்ப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த இக்கட்டான நிலைமை சீராகி, திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர், ‘தாராள பிரபு’ மீண்டும் திரையிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

error: Content is protected !!