துருவங்கள் பதினாறு’, ‘ராட்சசன்’ படங்கள் வரிசையில் வரவிருக்கும் பரபரப்பு த்ரில்லர் ‘தட்பம் தவிர்.
கந்தக்கோட்டை ‘, ‘ஈகோ’ படங்களை இயக்கிய தயாரிப்பாளர் இயக்குநர் சக்திவேல் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் ‘தட்பம் தவிர்’ .
இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. துருவங்கள் பதினாறு, ராட்சசன் போல் யாரும் எதிர்பார்க்க முடியாத, யூகிக்க முடியாத அடுத்தடுத்த காட்சிகளோடு இப்படம் செல்லும். இப்படத்தை ஜெகன் நாராயணன் இயக்கியிருக்கிறார் .இவர் தயாரிப்பாளர் இயக்குநர் சக்திவேலிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். ‘பரதேசி’ ,’நான் சிவனாகிறேன்’ படங்களில் நடித்த கார்த்திக் அசோகன் நாயகனாக பிரதான வேடம் ஏற்றிருக்கிறார் .நாயகியாக மும்பை மாடல் பாயல் நடித்திருக்கிறார். மற்றும் புதுமுகங்கள் ஏராளமானவர்கள் நடித்துள்ளார்கள். ௹ல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன் , தியா சினி கிரியேஷன், மேஜிக் லேண்டர்ன் புரொடக்ஷன் என்று மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு வசந்த்DFT, இசை – பிரசன்னா சிவராமன், பாடல்கள் கவிஞர் வி.ஜே.பி, கலை – பிரசாத்.எடிட்டிங் அர்ஜுன்.
முழுக்க முழுக்க கோவா காடுகளில் உருவாகியுள்ள இப்படம் , பார்ப்பவர்களைப் புதிய பின்புலத்தில் மகிழவைக்கும். காட்டுக்குள் தேன் நிலவுக்கு செல்லும் காதல் ஜோடி சில தீய சக்திகளிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா? எப்படி தப்பித்தார்கள்? என்பதைச் மிரட்டலாக சொல்லும் கதை.
இக்கதை முழுக்க முழுக்க திரில்லர் சஸ்பென்சாக ஒவ்வொரு காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது, விரைவில் இப்படத்தின் டிரைலர்.
Related posts:
கிஷோர் சினி ஆர்ட் சிவகாசி முருகேசன் தயாரிப்பில், இயக்குனர் சுசி. ஈஸ்வர் இயக்கத்தில், சஞ்சய், மேக்னா நடிப்பில் வித்தியாசமான பரிமாணத்தில் திரைக்கு வரவிருக்கும் ஆக்ஷன் திரைப்படம் ‘தேடு’
“தா” ” உ” “சே” “நீ” “ரா” “ஏ” ஆகிய படங்கள் வரிசையில் அடுத்து “சா ” என்ற ஒற்றை எழுத்து தலைப்பில் புதிய படம் உருவாகிறது.
மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்.. காதலின் வலியை சொல்லும் எதார்த்த படம் “மாயபிம்பம்”.
LATCHA 2019 லாஸ் ஏஞ்சலஸ் பட விழாவில் இரட்டை விருது பெற்ற “ராட்சசன்” !
ரெஜினா கசான்றா நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு த்ரில்லர் “ எவரு “ !
வெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் ‘கொலைகாரன்’
குறைந்த செலவில் எடுக்கப்படும் ‘மரிஜுவானா’ போல தரமான படங்கள் வெற்றியடைய வேண்டும் – இயக்குனர் மிஸ்கின்
தமிழ் நாட்டை விட ஆந்திராவில் அதிகம் சம்பாதிக்கும் ‘ராட்சசன்
ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.
நடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி*

