46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார் தல அஜித்குமார்.
சென்னை 07 மார்ச் 2021
தமிழ் திரைப்பட துறையில் நடிப்பையும் தாண்டி பல திறமைகளுக்கு சொந்தக்காரன் நடிகர் தல அஜித்குமார்.
பைக் ரேஸ், கார் ரேஸ், ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது, போட்டோகிராபி, துப்பாக்கி சுடுதல் பயிற்சி் என பல துறைகளில் இவரின் சாதனைகள் அதிகம்.
தற்போது சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித்குமார்.
இந்த நிலையில் 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.
முதலிடம் பிடித்த அஜித்குமாருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதனையறிந்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் தல கால் புரியாமல் கொண்டாடி வருகின்றனர்.











