நடிகர் சூரியாவிற்கு இயக்குநர் ஹரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் சூர்யாவிற்கு அதிரடியான ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் ஹரி.

இவர்கள் இணைந்த சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, ஆறு, வேல் ஆகிய அனைத்து திரைப்படங்கள் அனைத்துமே மிக பெரிய வெற்றி பெற்றது.

விரைவில் உருவாக்க இருக்கும் அருவா என்ற திரைப்படத்திற்காக இருவரும் இணையவுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது சூரரைப் போற்று திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட போவதாக ஓரிரு தினங்களுக்கு முன் அறிவித்தார்.

அந்த முடிவை நடிகர் சூர்யா மறுபரிசீலனை செய்தால் சினிமா இருக்கும் வரை உங்கள் பேரும் புகழும் நிலைத்து நிற்கும்.. என நடிகர் சூரியாவிற்கு டைரக்டர் ஹரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!