நடிகர் ஜீவா இன்று தட்டுப்பூசி போட்டுக்கொண்டு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை 08 மே 2021

நடிகர் ஜீவா இன்று தட்டுப்பூசி போட்டுக்கொண்டு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஜீவா கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பூசி போட்டு கொண்டு அவருடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று வராமல் தடுக்க கோவிஷீல்டு, கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகளை இந்திய அரசு மக்களுக்கு வழங்கியுள்ளது.

45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக அந்த தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் போடப்பட்டு வருகிறது.

மே மாதம் 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களும்
கொரோனா வைரஸ் நோய் தொற்று வராமல் தடுக்க
தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

18 வயதைக் கடந்த திரை உலக பிரபலங்கள் தற்போது ஒவ்வொருவராக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ஜீவா கொரோனா வைரஸ் நோய் தொற்று தட்டுப்பூசி இன்று போட்டுக்கொண்டார்.

மேலும், அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும், வீட்டில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!