ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த திரைப்படத்தின் அப்டேட்..!
சென்னை 06 ஜூன் 2021
ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த திரைப்படத்தின் அப்டேட்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள நடிகர் தனுஷின் ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஜூன் 18ஆம் தேதி OTT தளத்தில் வெளியாகிறது.
ஒரு பக்கம் பிஸியான இயக்குனராக இருந்தாலும் அவ்வப்போது திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார் கார்த்திக் சுப்பராஜ்.
இவரின் ஸ்டோன் பென்ச் கிரியேஷன் சார்பாக அவியல், மேயாதமான், பெண்குயின் ஆகிய திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்
இந்த நிலையில் தற்போது பாபி சிம்ஹா, ரக்ஷித் ஷெட்டியின் ’777 நடித்த கன்னடத்தில் தயாரான 777 சார்லி திரைப்படத்தை தமிழில் தனது ஸ்டோன் பென்ச் கிரியேஷன் சார்பாக வெளியிடுகிறார் இயக்குநர்
கார்த்திக் சுப்பராஜ்.
777 சார்லி படத்தில் ரக்ஷித் ஷெட்டி நடிக்க, இயக்குநர் கிரண்ராஜ் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தின் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டியுடன் இணைந்து ஜிஎஸ்.குப்தா என்பவர் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
கன்னட திரைப்பட உலகில் முன்னணி நடிகர் ரக்ஷித் ஷெட்டி தற்போது ‘777 சார்லி’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சார்லி என்ற நாயுடனான அன்பை சொல்லும் நகைச்சுவைப் படமாக உருவாகியிருக்கும், இந்த திரைப்படத்தில் நடிகர் பாபி சிம்ஹா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இது பாபி சிம்ஹா அறிமுகமாகும் முதல் கன்னட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படமானது ஒரு இளைஞனுக்கும், அவனது நாய்க்கும் இடையில் நடைபெறும் ஓர் அழகான பாசத்தை சொல்லும் கதை.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆகிய ஐந்து மொழிகளில் இந்த 777 சார்லி திரைப்படம் வெளியாகிறது.
இந்த திரைப்படத்தின் மலையாள பதிப்பை நடிகர் பிருத்விராஜ் வெளியிடுகிறார்.











