நடிகர் தனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் திரையிடும் தேதி உறுதியானது !
நடிகர் தனுஷ், நடிகை மேகா ஆகாஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. பல திரையிடும் தேதிகள் அறிவிக்கப்பட்டும்,
அறிவித்த தேதியில் இந்தப் படம் வெளியாகாததால் படக்குழு மற்றும் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தின் இறுதியான திரையிடும் தேதி என நவம்பர் 15ம் தேதியை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் அறிவித்துள்ளார்.











