நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு தனுஷின் பிறந்தநாள் அன்று ரகிட ரகிட பாடல்…; ஜகமே தந்திரம் அப்டேட்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தை அடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜகமே தந்திரம்”
இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள திரைப்பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
கடந்த மே 1-ம் தேதி “ஜகமே தந்திரம்” திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் இந்த “ஜகமே தந்திரம்” திரைப்படத்தை வெளியீடு செய்யப்படவில்லை.
இந்நிலையில் நடிகர் தனுஷின் பிறந்தநாள் அன்று ஜூலை 28-ம் தேதி ரகிட ரகிட என்ற பாடல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.











