நடிகர் நம்பியார் சிவாஜி கணேசன்யை விட கம்பீரமாக நடக்க கூடியவர் – நடிகர் சிவகுமார்*

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் எம்.என்.நம்பியார். இவர் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி மறைந்தார். இந்நிலையில் அவர் மறைந்த நாளான நேற்று அவரது குடும்பத்தினர் சார்பாக நம்பியாரை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோலிவுட் திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசுகையில், 1955-ல் ‘பெண்ணரசி’ என்ற படத்தில் நம்பியார் சல்யூட் அடிக்கும் காட்சி இன்னும் கண்ணுக்குள் நிற்பதாக கூறினார். மேலும் நம்பியார் சிவாஜியை விட கம்பீரமாக நடக்க கூடியவர் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

error: Content is protected !!