திரைப்பட படப்பிடிப்பு திரையரங்குகள் திறப்பது எப்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு கவலையடைந்த திரையுலகினர்.
கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டிட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்…
திரைப்பட துறையினர் படப்பிடிப்புக்கு அனுமதி கோரி திரைப்படத்துறையினர் என்னையும் தமிழக முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைத்து உள்ளனர்.
சின்னத்திரை ( சீரியல் ) படப்பிடிப்பு நடைபெற உள்அரங்கு போதுமானது. அங்கு 60 பேர் இருந்தால் கூட போதுமானது.
ஆனால் திரைப்படத்தின் படப்பிடிப்பு அவுட்டோரில் திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்றால்.
எனவே அங்கே படப்பிடிப்பை பார்க்க பார்வையாளர்கள் கூட்டம் கூட்டமாக திரளுவார்கள்
மேலும் படப்பிடிப்பு நடத்த பல்வேறு அனுமதி வாங்க வேண்டியுள்ளது.
இப்போதுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்றின் கட்டுப்பாடு சூழ்நிலையில் அதற்கெல்லாம் அனுமதிக்க வழங்க இயலாது.
இது குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்வார்.
மேலும் தியேட்டர்கள் திறப்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.“ என்றார்.
அமைச்சரின் இந்த பதிலால் கவலையடைந்த திரையுலகினர் தங்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்? என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.











