நண்பர் அஜித்குமார் டிரெண்ட். தல ரசிகர்களையும் தனது வசப்படுத்திய தளபதி விஜய் :!

நேற்று மார்ச் 15 மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழா சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

இதில் நடிகர் தளபதி விஜய் பேசும்போது… தன் நண்பர் அஜித்குமாரை போல கோட் சூட் உடையணிந்து வந்ததாக குறிப்பிட்டு பேசினார்.

இதனையடுத்து ‘நண்பர் அஜித்குமார் என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தளபதி விஜய் & அஜித்குமார் ரசிகர்கள் இந்த ஹேஷ்டாக்கில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்

பெரும்பாலும் தளபதி விஜய் & அஜித்குமார் ரசிகர்கள் இணையத்தில் சண்டை போடாத நாட்களே இல்லை.. அதுவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி அடித்து கொள்வர்.

ஆனால் நேற்று முதல் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இது தொடர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆக…. நண்பர் அஜித்குமார் என்ற வார்த்தை மூலம் தல ரசிகர்களையும் தன் வசப்படுத்தி விட்டார் தளபதி விஜய்.

error: Content is protected !!