பாரதிய ஜனதா கட்சி மீதும் பாரத பிரதமர் நரேந்திர மோடி மீதும் நம்பிக்கை கொண்ட சூப்பர் ஸ்டாரை பாரதிய ஜனதா கட்சியில் இணைப்பேன் நடிகர் தயாரிப்பாளர் பிரமிட் நட்ராஜன்.
வட இந்திய பிரபலங்கள் பலர் பாரதிய ஜனதா கட்சிவில் இணைந்து வருகின்றனர்.
அதுபோல் தென்னிந்தியாவிலும் பாரதிய ஜனதா கட்சிவில் சில திரை பிரபலங்கள் இணைவதை பார்க்க முடிகிறது.
நடிகர் ராதாரவி, மதுவந்தி, கெளதமி, விஜயகுமார், குட்டி பத்மினி, நமீதா, ஜெயலட்சுமி, கஸ்தூரி ராஜா, கங்கை அமரன், காயத்ரி ரகுராம்
ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் பாஜக.வில் உள்ளனர்.
சில தினங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார் நடிகரும் தயாரிப்பாளருமான பிரமிட் நடராஜன்.
அவரின் அண்மை பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
‘பாரதிய ஜனதா கட்சியின் மீதும், நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவர் தமிழ்நாட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு தலைமையேற்க வேண்டும் என்று ரொம்ப வருடங்களாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு வந்துவிட்டால், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி பலம் அதிகரிக்கும்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பிக்காத பட்சத்தில், அவரை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைக்க நிச்சயமாகப் பாடுபடுவேன்.
நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததிற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்”
இவ்வாறு நடிகர் பிரபல தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் தெரிவித்துள்ளார்.











