பாரதிய ஜனதா கட்சியின் தமிழக கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளராக தயாரிப்பாளர் பெப்சி சிவா !

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் மாநில செயலாளராக தயாரிப்பாளர் பெப்சி சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் தேர்ந்த இறை நம்பிக்கையாளர் மிக கடினமான உழைப்பாளி என்று கருதப்படுபவர் தயாரிப்பாளர் பெப்சி சிவா,

“பெப்சி” தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் பொதுச் செயலாளராகவும் தலைவராகவும் பல பொறுப்புகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்தவர் தயாரிப்பாளர் பெப்சி சிவா.

அதுமட்டுமல்லாது அகில இந்திய மாமன்ற தலைவராக 5 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.

அதுமட்டுமில்லாது இப்போது வரை பெப்சி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் வளர்ச்சியில் முக்கியமான நபராக இருக்கிறார்.

தற்போது இசையமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள “தமிழரசன்” எனற  திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் சுரேஷ்கோபி சோனுசூட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இயக்குநர் பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக முற்றிலும் புதுமையாக சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து மிகச் சிறப்பாக நடத்தி திரைத்துறை உள்ள அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்த தமிழரசன் திரைப்படத்தின் இசை வெளியீடு விழாவிற்கு பொன்.ராதாகிருஷ்ணன், ராதாரவி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பி.ஜே.பி-யின் முக்கிய விஜபிக்கள் பலரும் வந்திருந்தனர்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியிலும் தனது நற்பணியை நன்றாக செய்து வருவதாலே இந்தப் புதிய பொறுப்பை தலைமை அவருக்கு வழங்கியிருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சி தந்திருக்கும் இந்த பொறுப்பை மிகுந்த பொறுப்போடு செயல்படுத்தும் ஆர்வத்தில் மகிழ்ச்சியோடு இருக்கிறார் தயாரிப்பாளர் பெப்சி சிவா.

பாரதிய ஜனதா கட்சியில் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் என்னை செயலாளராக நியமனம் செய்த கட்சியின் மேல் இடத்திற்கும் மற்ற கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

error: Content is protected !!