காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி.
தற்போது நடிகை விஜயசாந்தியும் நடிகை குஷ்பூவும் தீவிரமாக அரசியலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அடுத்த ஆண்டு 2021 ஜனவரியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளார்.
அண்மையில் காங்கிரஸ் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் நடிகை குஷ்பூ.
இவரை தொடர்ந்து நடிகை விஜய்சாந்தியும் பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளார்.
தமிழ் & தெலுங்கில் ஆக்ஷ்ன் திரைப்பட உலகில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை விஜயசாந்தி கடந்த 1997-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
அதன் பின் ‘தல்லி தெலங்கானா’ என்னும் தனிக்கட்சியை நடிகை விஜயசாந்தி தொடங்கினார்.
பின்னர் அந்த கட்சியை நிரந்தரமாக கலைத்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
இதற்கு அடுத்து பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்தார்.
2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேடாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை விஜயசாந்தி, கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்தும் விலகினார்.
அதன்பின் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார குழு தலைவராக செயல்பட்டார் நடிகை விஜயசாந்தி.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நேற்று அதிகாரப்பூர்வமாக
ராஜினாமா செய்த நடிகை விஜயசாந்தி,
இந்தநிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைய டெல்லி சென்றுள்ளார்.
அந்த கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்கவுள்ளார்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் விஜயசாந்தி சந்திக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
நடிகை குஷ்பூவை தொடர்ந்து நடிகை விஜயசாந்தி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












