மும்பை மக்களுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நடிகர் ஷாருக்கான்.

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு மற்றும் அதன் தடுப்பு பணிகளுக்காக கோடிக்கணக்கான தொகைகளை மத்திய அரசும் மாநில அரசும் செலவிட்டு வருகின்றன.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவரின் நிவாரண நிதி மற்றும் உதவிகள் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில். கூறியதாவது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பாக பிரதமர் நரேந்திரமோடியின் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும்.

நானும் எனது மனைவி கௌரி கான் உரிமையாளர்களாக இருக்கும் ரெட் சில்லீஸ் நிறுவனம் சார்பில் மராட்டிய மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும்.

மேற்கு வங்காளம் மற்றும் மராட்டிய மாநிலத்திற்கு ரூபாய் 50,000 கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.

மும்பையில் உள்ள 5 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய மளிகை பொருள்கள் வழங்கப்படும்.

2000 பேருக்கு உணவு சமைத்து வீட்டு வேலை செய்பவர்களுக்கு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.

மேலும் மும்பையில் உள்ள ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும் என்று இவ்வாறு நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!