முருங்கைகாய் சிப்ஸ் திரை விமர்சனம் ரேட்டிங் –1.5 /5

நடிகர் நடிகைகள் – சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி, கே.பாக்யராஜ், ஊர்வசி, யோகி பாபு, வி.சி.ரவீந்திரன், மனோ பாலா, மதுமிதா, முனிஷ்காந்த், மயில்சாமி, ராஜு, மற்றும் பலர்.
தயாரிப்பு – லிப்ரா புரொடக்ஷன்ஸ்.
இயக்கம் – ஸ்ரீஜர்.
ஒளிப்பதிவு – ரமேஷ் சக்ரவர்த்தி.
படத்தொகுப்பு – ஜோமின்.
இசை – தரண் குமார்.
திரைப்படம் வெளியான தேதி – 09 டிசம்பர் 2021
ரேட்டிங் –1.5 /5
தமிழ் திரைப்பட உலகில் எத்தனையோ விதமான நல்ல நல்ல கதை களங்கள்களையும் பார்த்திருக்கிறோம்.
இப்படி ஒரு மோசமான கதைகளையும் பார்த்திருக்கிறீர்களா.
இந்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் இருப்பது மோசமான கதை மட்டுமல்ல, ஆபாசமான கதையும் கூட.
இப்படி ஒரு கதையை தான் இயக்குனரும் தயாரிப்பாளரும் எடுத்திருக்கிறார்கள்.
இப்படி ஒரு மட்டமான
கதையையெல்லாம் ஒரு திரைப்படமாக எடுக்கலாம் என யோசித்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும், நடிக்க சம்மதித்த நடிகர் நடிகைகளுக்கும் தேர்ந்தெடுத்தாலும் தெரியவில்லை.
கதாநாயகன் சாந்தனு பாக்யராஜ் கதாநாயகி அதுல்யா ரவிக்கும் திருமணம் நடைபெறுகிறது.
ஒன்பது தலைமுறையாக உள்ள குடும்பத்திற்குச் சொந்தமான 300 கோடி ரூபாய் சொத்து வேண்டுமென்றால் முதல் இரவில் உனது மனைவி மீது சுண்டு விரல் கூட படக்கூடாது எனக் கூறுகிறார் கதாநாயகன் சாந்தனு பாக்யராஜின் தாத்தா
அப்படி முதல் இரவு நடந்தால் 300 கோடி சொத்தும் அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிடுவேன் எனக் கூறுகிறார் கதாநாயகன் சாந்தனு பாக்யராஜின் தாத்தா.
மேலும் இருவரும் தூங்காமல் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
இன்னொரு பக்கம்
கதாநாயகி அதுல்யா ரவியின் குடும்பத்தில் முதல் இரவில் சும்மா இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போய்விட்டது அதனால், அன்றே அதை முடித்திட வேண்டும் என அதுல்யா ரவியிடம் கூறுகிறார் அவரது அத்தை ஊர்வசி.
இறுதியில் கதாநாயகன் சாந்தனு பாக்யராஜிக்கும், கதாநாயகி அதுல்யாரவிக்கும் இடையே முதலிரவு நடந்ததா? இல்லையா? என்பதுதான் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகன் சாந்தனு பாக்யராஜ் துறுதுறு இளைஞனாக நடித்து அசத்தி இருக்கிறார்.
அதுபோல் கதாநாயகி அதுல்யா ரவி துள்ளலான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
இவர்கள் இருவரின் காம்பினேஷன் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
அனாதை ஆசிரமத்திற்கு சொத்து சென்றால் அதில் 10 சதவீதம் கமிஷன் வாங்கத் துடிக்கிறார் அக் குடும்பத்தின் மானேஜர் மனோபாலா அவர் மனைவியாக மதுமிதா நடிப்பு அருமை.
பாக்யராஜ், ஊர்வசி, யோகி பாபு, முனிஸ்காந்த் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
முதலிரவை மையக்கருவாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீஜர்.
திரைப்படம் முழுக்க முழுக்க ஒரே இரவில் நடக்கிறது.
அதுவும், ஒரே அறையில் தான் கதை நகர்கிறது.
இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீஜர்
நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நகைச்சுவை
அதிகம் எடுபடவில்லை.
ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிக்க முடிந்தது.
முதலிரவு குறித்து அட்வைஸ், பழைய திரைப்படங்களில் வந்த டயலாக் ஆகியவை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது.
தரண்குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது.
குறிப்பாக ரமேஷ் சக்ரவர்த்தியின் ஒளிப்பதிவோடு பாடல்களை பார்க்கும் போது மிகவும் கலர்ப்புல்லாக இருக்கிறது. படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ரமேஷ் சக்ரவர்த்தி.
தான் தயாரிக்கும் திரைப்படத்தை அந்தப் திரைப்படத்திலேயே கிண்லடித்துக் காட்சி வைக்கும் தயாரிப்பாளரையும், இயக்குனரையும் இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறோம்.
மொத்தத்தில் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படம் வீரியம் இல்லாத சிப்ஸ்.











