மூவி ட்ராக்கர்ஸ்களை கட்டுப்படுத்த புரொடியூசர்ஸ் நியூ ப்ளான்

மூவி ட்ராக்கர்ஸ்களை கட்டுப்படுத்த புரொடியூசர்ஸ் நியூ ப்ளான்

ஒரு திரைப்படம் வெளியானால் அதன் வசூல் நிலவரம் சரியாக தெரிய குறைந்த பட்சம் ஒரு வார காலம் ஆகும்.

ஆனால் ரிலீசான முதல் நாள் இரவு காட்சி தொடங்கிய உடனே ட்ராக்கர்ஸ் என்ற பெயரில் சிலர் முதல் நாள் வசூல் இத்தனை கோடிகள் என டன் கணக்கில் பொய்யை சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.

இவர்கள் திரைத்துறையை சார்ந்து இருக்கிறார்கள் என்பதால் இதை எல்லாம் நிஜம் என்றே நம்பி மற்றவர்களும் அந்த வசூல் தொகையை ட்ரெண்ட் செய்கின்றனர்.

சிலர் கொடுக்கும் கூலிக்காக இதை எல்லாம் செய்கின்றனர் என்பதை அறியாதவர்கள் தான் இதனை ட்ரெண்டாக்குகின்றனர்.

இப்படி அதிகப்படியான பொய்களை முக்கியமாக விஜய், அஜித் படங்களுக்கு சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் இந்த ட்ராக்கர்ஸ்.

சமீபத்தில் இவர்களின் பொய்யான தகவல்களால் மாட்டிக் கொண்டவர் நடிகர் விஜய்.

இதனால் பிகில் பட தயாரிப்பாளர், பைனான்சியர் வீடுகளில் வருமான வரி சோதனைகள் நடைபெற்றது.

இதை தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் விரைவில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

இதுபோல் தெலுங்கு திரையுலகிலும் பிரச்சினைகள் தொடரவே அங்குள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் (கில்டு) புதிய நடவடிக்கையை எடுக்கவுள்ளனர்.

அண்மையில் வெளியான ‘சரிலேரு நீக்கெவரு, அலா வைகுந்தபுரம்லோ’ ஆகிய படங்கள் வசூல் விவரங்களை அங்குள்ள ட்ராக்கர்ஸ்களும் இங்குள்ள ஒரு சிலரும் பொய்த் தகவல்களை போட்டி போட்டுக் கொண்டு அளித்தார்கள்.

வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள படங்களின் வசூல் விவரங்களை தயாரிப்பாளர் கில்டு சங்கமே வெளியிடப் போகிறதாம்.

இதனால் சரியான வசூல் விவரங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

தமிழ் சினிமாவிலும் இது நடைபெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏனென்றால் தங்களுக்கு பிடித்த நடிகர்களையும், லட்சணக்கணக்கில் பணம் கொடுக்கும் தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்த இது போன்ற வேலைகளில் ஈடுபடும் ட்ராக்கர்ஸை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பலரின் ஆவலாக உள்ளது

CLOSE
CLOSE
error: Content is protected !!