மெகா ஸ்டார் மம்முட்டியுடன் இணையும் பிரேமம் திரைப்படத்தின் இயக்குனரும் நடிகர் அருண் விஜய்யும்.

பிரேமம் திரைப்படத்தை இயக்கிய பிரபலமான இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் அருண்விஜய் நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் மலையாள நடிகர் நிவின் பாலி – நடிகை நஸ்ரியா நஷீம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘நேரம்’ திரைப்படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன்.

முதல் திரைப்படத்திலேயே அனைவரையும் கவர்ந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், அடுத்ததாக மலையாளத்தில் இயக்கிய ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் அனைவர்க்கும் மத்தியிலும் பேசப்படும் ஒரு இயக்குனரானார்.

‘பிரேமம்’ திரைப்படம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரைப்பட உலகில், தமிழ் திரைப்பட உலகிலும் மிக பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.

பிரேமம் திரைப்படத்திற்கு பின் மலையாள நடிகர் காளிதாஸ் ஜெயராமை வைத்து திரைப்படம் இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், அந்த திரைப்படத்தை பாதியிலேயே கிடப்பில் போட்டுள்ளார்.

இந்நிலையில், தனது அடுத்த திரைப்படத்தை தமிழில் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் மெகா ஸ்டார் நடிகர் மம்முட்டி மற்றும் நடிகர் அருண்விஜய்யை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த திரைப்படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு லாக்டவுனுக்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!