மெய் – திரை விமர்சனம்
நடிப்பு – நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ். கிஷோர்.சார்லி. மற்றும் பலர்
தயாரிப்பு – சுந்தரம் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – எஸ்ஏ பாஸ்கரன்
இசை – பிருத்விகுமார், அனில் ஜான்சன்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
வெளியான தேதி – 23 ஆகஸ்ட் 2019
ரேட்டிங் – 2.25/5
ஒரே மாதிரியான கதைகள் கொண்ட படங்கள் தமிழ் திரைப்பட உலகில் அடிக்கடி வருவதுண்டு. அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் மெய்.
அஜித்குமாரின் என்னை அறிந்தால், சிவாகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படங்களின் வரிசையில் மெடிக்கல் கிரைம் பற்றிய படம்தான் இதுவும். அந்தப் படங்களில் கதாநாயகர்கள் காக்கி சட்டை போட்டுக் கொண்டு வில்லனைக் கண்டுபிடித்து அழிக்கிறார்கள். அது இந்தப் படத்தில் ஒரு டாக்டரே செய்கிறார்.
அறிமுக இயக்குனர் எஸ்ஏ பாஸ்கரன் கதை திரைக்கதையில் ஒரு பரபரப்பான படமாகத்தான் இந்தப் படத்தையும் கொடுத்திருக்கிறார். இருப்பினும் இதற்கு முன்பே நாம் பார்த்த கதை என்பதால் அடுத்து அடுத்த இப்படித்தான் கதை நகரும் என்பதை நம்மால் சிந்திக்க முடிகிறது இந்த படத்தில் அதுதான் மிகவும் மைனஸ் ஆகத்தான் இருக்கிறது.
பொய் சொல்லாத ஹீரோவைச் சுற்றி பொய்யான மனிதர்கள் சூழ்ந்தால் ஹீரோ எப்படியான எதிர்வினைகளைச் சந்திப்பார் என்பது தான் மெய் படத்தின் முக்கியமான லைன். மேலும் உடல் உறுப்புகளை அநியாயத்தின் வழியாக திருடும் விசயங்களையும் தோலுரிக்கிறது படம்.
தனது தாய் இறந்த துக்கம் தாங்கமுடியாமல், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகிறார் டாக்டருக்குப் படித்த கதாநாயகன் நிக்கி சுந்தரம். ஆனால், தன்னை டாக்டர் என காட்டிக் கொள்ளாமல் தனது தந்தையின் நண்பரான ஜார்ஜ் வீட்டில் தங்கி அவரது மெடிக்கல் ஷாப்பில் உதவியாக இருந்து வருகிறார். .
ஐஸ்வர்யா ராஜேஷ் மெடிக்கல் ரெப். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ஐஸ்வர்யா விபத்தில் அடிபட்ட சார்லியை காப்பாற்ற நிக்கி சுந்தரம் காரில் பயணிக்கிறார். இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டு பின்னர் அது காதலாகிறது
தமிழ் சினிமாவில் மெடிக்கல் ரெப்பாக முதல் முறையாக ஒரு கதாநாயகியின் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கதைக்குத் தேவைப்படும் என்பதால் அந்தக் கதாபாத்திரம் போலிருக்கிறது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இன்னொரு பக்கம் உடல் உறுப்புகளுக்காக ஆண் பெண் நபர்களை கடத்தி உறுப்புகளை திருடும் மாபியா கும்பல் ஒன்று செயல்படுகிறது. சார்லியின் மகள் மர்மமான முறையில் காணாமல் போகிறார்.
கடையில் வேலை பார்க்கும் ஒருவர் மருத்துவமனையில் திடீரென இறந்து போகிறார்
நிக்கிசுந்தரத்தின் நண்பரை கொல்லும் அந்த மருத்துவர் அந்த கொலைபழியை கதாநாயகன் நிக்கி சுந்தரம் மீது போடுகிறார்கள்.
அந்த மரணத்தில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்பது விக்கி சுந்தரத்திற்கு புரிகிறது. அது என்ன என்பதைக் கண்டுபிடிக்க காதலி ஐஸ்வர்யா ராஜேஷ் உதவியுடன் களமிறங்குகிறார்.
அதை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை
இந்த மர்மங்களின் பின்னணியை கதாநாயகன் நிக்கி சுந்தரம், கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நண்பர்கள் உதவியுடன் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை. அன்றாடம் நாம் படிக்கும், கடந்துசெல்லும் மருத்துவ குற்ற சம்பவங்களை இணைத்து விறுவிறுப்பான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன்
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த கதாநாயகன் நிக்கி சுந்தரம் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படம் என்பதால் நடிக்க முயற்சித்திருக்கிறார். எப்போதுமே ஒரு சோகத்தில் இருப்பது போலவே முகத்தை வைத்துக் கொள்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷைப் பார்த்த பிறகாவது அடிக்கடி சிரிக்க ஆரம்பித்திருக்கலாம்.
வில்லன்களாக இரண்டு டாக்டர்கள், இரண்டு போலீஸ், ஒரு ஹாஸ்பிட்டல் முதலாளி என ஒரு கூட்டணியை வைத்திருக்கிறார்கள். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் கிஷோர், சப் இன்ஸ்பெக்டராக வரும் அஜய் கோஷ் இருவருக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். கிஷோர் கதாபாத்திரம் பற்றிய திருப்பம் எதிர்பாராத ஒன்று. இருந்தாலும் அவருக்குத் தெரியாமல் நடந்த ஒரு விஷயத்தில் அவரையும் குற்றவாளி போல தண்டிப்பது ஏற்புடையதல்ல.
ஹீரோ நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அவர் நடிப்பில் இன்னும் நிறைய மெனக்கெட வேண்டும். ஏர்போட்டில் இருந்து அப்படியே சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருப்பார் போல. அவருக்கு கொஞ்சநாள் ட்ரைனியிங் கொடுத்திருக்கலாம். ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டரை விட கிஷோர் கேரக்டர் நிறைய ஸ்கோர் பண்ணுகிறது. விஜய்டிவி தங்கதுரை ஓ.கே. மற்ற வில்லன் டாக்டர்கள் வில்லாதி வில்லன் போல மிரட்டுகிறார்கள். சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கில் சலிப்படையச் செய்கிறார்கள்
பிருத்வி குமார் இசையில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை. அனில் ஜான்சன் பின்னணி இசை பரவாயில்லை.
மெய்யாக என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். இடைவேளை வரை சுவாரசியமாகவே படம் நகர்கிறது. அதன்பின் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் கதாநாயகன் மீதான முக்கியத்துவம் குறைகிறது. அவரது கண்ணோட்டத்திலேயே படத்தை நகர்த்தியிருக்கலாம்.
நிக்கி சுந்தரம் தானே தயாரிப்பாளராக இருந்தாலும் கூட தனக்கு பொருத்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து சபாஷ் வாங்குகிறார். படத்தின் எந்த காட்சியிலும் அவர் நாயகனாக தெரியாமல் கதையின் முக்கிய கதாபாத்திரமாகவே தெரிகிறார். கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாநாயகர்கள் வரிசையில் இணைந்த நிக்கி சுந்தரத்துக்கு பாராட்டுகள். அமெரிக்காவில் இருந்து வந்து இந்தியாவின் நிலையை பார்த்து வருத்தப்படும்போதும், தன்மீது விழுந்த பழியை துடைக்கவும் நண்பனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடும்போதும் கவர்கிறார். இதேபோல் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் முன்னணி கதாநாயகன் ஆகிவிடலாம்.
அதற்கான திறமை பளிச்சிடுகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத மெடிகல் ரெப் பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ். உதவும் மனப்பான்மை, மேனேஜரிடம் சிக்கி பொய் பேசுவது, நிக்கிக்கு உதவுவது என்று சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். கிஷோர், சார்லி, ஈ.ராம்தாஸ் மூவருமே தங்களது குணச்சித்திர நடிப்பால் படத்தை தாங்கி பிடித்துள்ளனர். டைகர் தங்கதுரை, மதன் கோபால், ஜார்ஜ் கூட்டணி படத்தின் முதல் பாதியை கலகலப்பாக நகர்த்துகிறது. அஜய் கோஷ், அரோல் சங்கர், அபிஷேக் கூட்டணி இயல்பான வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார்கள்.
இதுபோன்ற திரில்லர் படங்களுக்கு பின்னணி இசை மிகவும் முக்கியம். அனில் ஜான்சன் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். மோகனின் ஒளிப்பதிவு திகில் கூட்டுகிறது. பிரீத்தி மோகனின் படத்தொகுப்பு கச்சிதம். மருத்துவ துறையில் முக்கியமாக உடல் உறுப்பு தானம் விஷயத்தில் நடக்கும் குற்றங்களை பின்னணிகளுடன் தெளிவாக விளக்கி உள்ளது மெய்.
படம் பேசும் கருத்தும் மிகவும் முக்கியமானதும் அவசியமனாதும் கூட. உண்மை சம்பவங்களை கோர்த்து விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக்கிய எஸ்.ஏ.பாஸ்கரனுக்கு பாராட்டுகள். அவருக்கு துணையாக இருந்து கதை, வசனம் எழுதிய செந்தா முருகேசனுக்கும் பாராட்டுகள். இரண்டாம் பாதி முழுக்கவே கிளைமாக்ஸ் போல விறுவிறுப்பாக செல்கிறது.
மொத்தத்தில்
மெய் – உண்மையே மருத்துவத்துறையில் வெல்லுமா











